ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீது அதிருப்தி: காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா முடிவு
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது அதிருப்தி அடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு ஜான்குமார், வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை மதிப்பது இல்லை என்று புகார் எழுந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொகுதியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஜான்குமார் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி நிர்வாகிகள் யாரையும் அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நிர்வாகிகள் அதிருப்தி
இது குறித்து கேட்ட போது ஜான்குமார் அளித்த பதிலால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து கட்சி பதவியை கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்தனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று மாலை சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினர். அவர்களிடம் நமக்கு கட்சி தான் முக்கியம். எனவே இது தொடர்பாக வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தலாம் என்று கூறி சமாதானம் செய்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயத்தையும் அதிருப்தியாளர்கள் சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பரபரப்பு
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீது அதிருப்தி தெரிவித்து கட்சி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா முடிவு எடுத்த விவகாரம் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.