தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட போலீசார் சார்பாக நடைபெற்றது.

Update: 2020-02-19 22:15 GMT
ஊத்துக்கோட்டை, 

திருவள்ளூர் மாவட்ட போலீசார் சார்பாக இருசக்கர வாகனஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, சாலை விதிகளை மதித்து வாகனங்கள் ஓட்டினால் பாதுகாப்பாக வீடுகளுக்கு சென்றடையலாம். தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டினால் உயிர் விபத்துகளை தடுக்கலாம். தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது குற்றமாகும். அவ்வாறு இரு சக்கரம் வாகனம் ஓட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு அதிகாரம் உள்ளது என்று பேசினார். இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, சிட்டிபாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்