சிறப்பு மனுநீதி நாள் முகாம்

அச்சமங்கலத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

Update: 2020-02-19 22:00 GMT
ஜோலார்பேட்டை, 

திருப்பத்தூர் தாலுகா பாச்சல் மற்றும் அச்சமங்கலம் கிராமங்கள் பயனடையும் வகையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் அச்சமங்கலம் கிராமத்தில் உள்ள பட்டாளம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் தணிகாச்சலம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் கலந்துகொண்டு, 59 பேருக்கு ரூ.6 லட்சத்து 52 ஆயிரத்து 958 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

முகாமில் மண்டல துணை வட்டாட்சியர் காஞ்சனா, கிராம நிர்வாக அலுவலர் சரண்யா, கூட்டுறவு சங்க தலைவர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்