பள்ளிகள் விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள்
பள்ளிகள் விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் குவிந்தனர்.
மாமல்லபுரம்,
பிரான்ஸ் நாட்டில் பள்ளிகள் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் பள்ளி விடுமுறையையொட்டி மாமல்லபுரத்திற்கு தங்கள் குழந்தைகளுடன் அந்நாட்டு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லூரியில் பட்டம் பெற்ற கற்சிற்பக்கலைஞர் சீனிவாசன் ( வயது 44) என்பவரை கலையின் மேல் உள்ள ஆர்வத்தால் விரும்பி திருமணம் செய்து கொண்ட கேப்ரியேல்(42) என்ற பிரான்ஸ் பெண்மணி தனது கணவர் சீனிவாசன் மற்றும் குழந்தைகளுடன் ஆண்டுதோறும் பள்ளி விடுமுறையை கழிக்க மாமல்லபுரம் சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டு பயணிகள் வருகையால் மாமல்லபுரம் முக்கிய புராதன சின்னங்கள் களைகட்ட தொடங்கி உள்ளன.
மார்ச் 1-ந்தேதிக்கு பிறகு அதிக அளவு பிரான்ஸ் பயணிகள் மாமல்லபுரத்துக்கு வருகை தர இந்திய தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்துள்ளனர்.