இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவதை தவறாக பேசுவது துரதிர்ஷ்டமானது கவர்னர் கிரண்பெடி கருத்து
இலவச அரிசிக்கு பதிலாக வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படுவதை தவறாக பேசுவது துரதிர்ஷ்டமானது என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் கவர்னருக்கும், புதுவை அமைச்சரவைக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது. இலவச அரிசிக்கு பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தினார்.
அதன்படி அரிசிக்கான பணம் வங்கிக்கணக்கில் போடப்பட்டது. ஆனால் இலவச அரிசிதான் வழங்கவேண்டும் என்று அமைச்சரவை தொடர்ந்து வலியுறுத்தியது. இதையடுத்து பயனாளிகளின் வங்கிக்கணக்கில் அரிசிக்கு பதிலாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருதரப்பு விவாதங்களும் முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இலவச அரிசி விவகாரத்தில் மீண்டும் மீண்டும் தவறான தகவலை பரப்பி வருவதால் விளக்கம் தரவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். புதுவை அரசு நிர்வாகம் தனது பட்ஜெட்டிலிருந்து அதிக விலையில் அரிசி கொள்முதல் செய்து குடோனில் வைத்து பொதுமக்களுக்கு அரிசி வினியோகம் செய்கிறது.
அரசாங்கத்திடம் பணம் இல்லாதபோது அதிக விலைகொடுத்து அரிசி வாங்குவதற்கு பதிலாக மத்திய அரசின் கொள்கைப்படி வங்கிக்கணக்கில் நேரடியாகவே அரிசிக்கான பணத்தை செலுத்திவிடலாம். இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான அரிசியை மார்க்கெட்டில் வாங்கிக்கொள்ள முடியும்.
இந்த முறையில் பயனாளிகளுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. இது பட்ஜெட்டிலும் நிதிச்சுமையை ஏற்படுத்தாது. இதைப்பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளாமல் துரதிர்ஷ்டவசமாக தவறான முறையில் பேசி வருகின்றனர். இந்த முறையினால் எந்த இழப்பும் இல்லாமல் பணம் நேரடியாக செல்கிறது.
மத்திய அரசு இதனை தேசிய கொள்கையாக உறுதி செய்கிறது. இது பெரிய கசிவினை தடுக்கிறது. மக்களே தாங்கள் வாங்கும் இடம், தரம் ஆகியவற்றை தேர்வு செய்துகொள்கின்றனர். அதோடு எந்த ஒப்பந்ததாரரும் தங்களது பில்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இவ்வாறு கவர்னர் கிரண்பெடி அந்த பதிவில் கூறியுள்ளார்.