வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது
திருப்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் உள்ள சக்திநகரை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
அதேபோல், திருப்பத்தூர் தாயப்பநகரை சேர்ந்த மோகன் (60) என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் புகுந்து பீரோவில் இருந்த 7 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து திருப்பத்தூர் டவுன், கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா ஒட்டப்பட்டியை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த வைரமுத்து (25) என்பவர் ஜெய்சங்கர், மோகன் வீட்டில் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வைரமுத்துவை கைது செய்து, திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.