5.15 கோடி வாக்காளர்கள் உள்ளனர் கர்நாடகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 5.50 லட்சம் பேர் சேர்ப்பு

கர்நாடகத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 5.15 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதியதாக 5.50 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Update: 2020-02-10 23:44 GMT
பெங்களூரு, 

கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாக்காளர் பட்டியல் வெளியீடு

கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் பணிகள் நடைபெற்று வந்தது. இவற்றை உள்ளடக்கி இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 7-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் நகரங்களில் வார்டு அலுவலகங்கள் மற்றும்www.ceokarnataka.kar.nic.inஅல்லதுnvsp.inஎன்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது.

பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்காக மொத்தம் 17 லட்சத்து 74 ஆயிரத்து 11 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 794 பெயர்கள் சேர்க்கப்பட்டன. 3 லட்சத்து 98 ஆயிரத்து 932 பெயர்கள் நீக்கப்பட்டன. 3 லட்சத்து 57 ஆயிரத்து 697 வாக்காளர் தகவல்களில் திருத்தம் செய்யப்பட்டன. இந்த பட்டியலில் ஆண்-பெண் பாலின விகிதம் அதாவது ஆயிரம் ஆண் வாக்காளர்களுக்கு 981 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் புதிதாக 5 லட்சத்து 50 ஆயிரத்து 332 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மூன்றாம் பாலின...

இறுதி வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 822 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 60 லட்சத்து 15 ஆயிரத்து 886 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 55 லட்சத்து 23 ஆயிரத்து 227 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 4 ஆயிரத்து 709 பேரும் உள்ளனர்.

இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்