களக்காட்டில் சிறுமிகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்தவர் கைது

களக்காட்டில் சிறுமிகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-10 22:48 GMT
களக்காடு,

களக்காடு சிங்கம்பத்தை சேர்ந்தவர் ஜவகர் அலி (வயது 63). இவர் களக்காடு-சேரன்மாதேவி சாலையில், இருசக்கர வாகனங்களுக்கான ‘சீட்‘ தைத்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார்.

இவர் தனது செல்போனில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் ஆபாச படங்களை பார்த்து வந்ததாகவும், மேலும் அதை பதிவிறக்கம் செய்து பலருக்கும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதை கண்டுபிடித்த தொழில்நுட்ப பிரிவினர் இதுகுறித்து களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜவகர் அலியை நேற்று கைது செய்தனர்.

செல்போனில் சிறுமிகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதுபோன்ற செயலில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கைகள் தொடரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்