பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 382 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
படப்பை,
நிகழ்ச்சிக்கு, மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீபெரும்புதூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் எழுச்சூர் ராமச்சந்திரன், படப்பை அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. பழனி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சி.கே.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சோமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பழனி கலந்துகொண்டு 221 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.