டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் - கோவையில் முத்தரசன் பேட்டி
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று முத்தரசன் கோவையில் பேட்டி அளித்தார்.
கோவை,
இந்தியகம்யூனிஸ்டு கட்சியின்மாநில செயலாளர் முத்தரசன்கோவையில்உள்ள கட்சிஅலுவலகமானஜீவா இல்லத்தில் நேற்றுநிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-
அன்புச்செழியன்வீட்டில் வருமானவரித்துறையினர்நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் பல்வேறுஆவணங்களையும்கைப்பற்றி உள்ளனர்.அந்தப்பணம்தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளின் பணம் தான். அவர்கள் யார் என்பதை வருமானவரித்துறைகண்டுபிடித்து வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டில் ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரம் தான்நடைபெற்றுக்கொண்டிருக்கிறதோஎன்ற ஐயப்பாடு எழுகிறது. குடியுரிமைதிருத்த சட்டத்திற்குஎதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதற்கு காவல்துறையால்அனுமதிமறுக்கப்படுகிறது. ஆனால், அதே காவல்துறையால் வாய்மொழியாக நீங்கள்நடத்திக்கொள்ளுங்கள்என்றுசொல்லப்படுகிறது. இதுபோன்ற அடக்கு முறைகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதை நாங்கள்வன்மையாக கண்டிக்கிறோம்.
தென்காசிராயகிரிஎன்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையால் 6 நிபந்தனைகள் விதித்து அனுமதிமறுக்கப்பட்டது. இது அரசியல் சட்டம் வழங்கி இருக்கிறகருத்துரிமையைமறுக்கிற போக்காகும். எனவேகருத்துரிமையைமறுக்கும்போக்கை தமிழகஅரசு கைவிட வேண்டும்.
சேலத்தில் அரசு நிகழ்ச்சியில் காவிரிடெல்டாபகுதியை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக முதல்-அமைச்சர்எடப்பாடிபழனிசாமிஅறிவித்திருக்கிறார். இதை நாங்கள் வரவேற்கிறோம். அதே கூட்டத்தில் அரசியலும்பேசியிருக்கிறார். அரசு நிகழ்ச்சிகளில் அரசியல் பேசுவது மரபு அல்ல.நாகரீகமும்அல்ல.
காவிரிடெல்டாபகுதியை விவசாய மண்டலமாகஅறிவித்திருப்பதுகாலம் கடந்த அறிவிப்பாகஇருந்தாலும், அதை இந்தியகம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.டெல்டாமாவட்டங்களை பாதுகாக்கசட்டம் இயற்றப்பட வேண்டும். மத்திய அரசு ஏற்கனவேடெல்டாமாவட்டங்களில்ஹைட்ரோகார்பன்எடுக்க மாநில அரசின்அனுமதி தேவையில்லைஎன்று கூறி உள்ளதோடு, மத்திய அரசு அனுமதிவழங்கியிருக்கிறது. மத்திய அரசின் அனுமதி ரத்துசெய்யப்படுமாஎன்பது குறித்தும்முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.
குடியுரிமை சட்டம்திரும்பப்பெறவேண்டும்என்றுதி.மு.க. தலைவர்மு.க.ஸ்டாலின்கூறியிருக்கிறார். வருகிற 14-ந்தேதி முதல் நடைபெறஇருக்கும்தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழக அரசுஇந்த தீர்மானத்தைமுன்மொழிந்துஅதை சட்டமாகநிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சிஅமைப்புகளுக்கு தேர்தல்நடத்தப்பட்டு உள்ளது. எஞ்சிய 9மாவட்டங்களுக்கும், அதேபோல் நகராட்சி,மாநகராட்சி பகுதிகளுக்கும்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதை நடத்தாமல் காலம் தாழ்த்தி எஞ்சியகாலத்தையும்கடத்தி விடுவார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
தமிழ்நாடுஅரசு பணியாளர்தேர்வாணையம் சீர்கேடு அடைந்துள்ளது.நன்மதிப்பையும்இழந்துவிட்டது. சமீபத்தில் நடைபெற்றுள்ள ஊழலில்கீழ்மட்டஅதிகாரிகள் தான் பிடிபட்டுள்ளனர். பணம் இருந்தால் வேலை வாங்கி விடலாம் என்ற நிலை மாறவேண்டும். இந்த முறைகேடுகளில் உயர்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் யார், யார் என்பதும்கண்டறியப்படவேண்டும்.ஐகோர்ட்டுநீதிபதி கண்காணிப்பில்இந்த விசாரணை நடைபெற வேண்டும். இந்த அரசு தொடரதார்மீகஉரிமை இல்லை. வருமானவரித்துறைபா.ஜனதா கட்சியின்ஒரு அமைப்பு போல் செயல்படுகிறது. இந்தஅமைப்பு சிலரைபணியவைக்கபயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போதுஇந்தியகம்யூனிஸ்டு கட்சியின்மாவட்ட செயலாளர்வி.எஸ்.சுந்தரம்,மாவட்ட துணைசெயலாளர்கள் ஆர்.தேவராஜ்,சி.சிவசாமிஆகியோர் உடன்இருந்தனர்.