ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் கோவில் தெப்பத்திருவிழா
ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.
கடையம்,
ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாதர் கோவிலில் 26-ம் ஆண்டு தெப்ப திருவிழா கடந்த 30-ந் தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 7-ந் தேதி சிவசைலத்தில் இருந்து சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் ஆழ்வார்குறிச்சி திருக்குளம் விநாயகர் கோவிலுக்கு எழுந்தருளினர். நேற்று முன்தினம் காலை விளா பூஜை அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து சுவாமி-அம்பாள் கேடயத்தில் எழுந்தருளி தருமபுரம் ஆதீனமடத்தில் இறங்கினர். 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு சாயராட்சை பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் கேடயத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளினர். தொடர்ந்து தெப்பத்தில் 11 சுற்றுகள் வலம் வந்தனர். இதில் ஆழ்வார்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் திருக்குளம் வீதிஉலா சென்று பெரிய தளவாய் மாடசாமிக்கு காட்சியளித்ததும், நேற்று காலை தருமபுரம் ஆதீனமடத்தில் இறங்கினர்.
ரிஷப வாகனத்தில் வீதி உலா
தொடர்ந்து சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளி கோவில் சேர்ந்தபின் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் கிருஷ்ணமூர்த்தி, ஆய்வாளர் முருகன், செயல் அலுவலர் தேவி மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.