மராட்டியத்தில் 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு இலவச மின்சாரம் மாநில அரசு திட்டம்

மராட்டியத்தில் 100 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் மின்நுகர்வோர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.

Update: 2020-02-08 23:15 GMT
மும்பை, 

மராட்டியத்தில் 100 யூனிட்டுக்குள் மின்சாரத்தை பயன்படுத்தும் மின்நுகர்வோர்களின் வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாகமின்சார துறை அதிகாரிகளுடன் அரசு பரிசீலனை செய்து வருகிறது. மேலும் தற்போது மாநிலத்தில் விவசாய பயன்பாட்டுக்கு இரவில் மட்டுமே மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பகல் நேரத்திலும் விவசாய பயன்பாட்டுக்கு மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுகுறித்து மாநில மின்சாரத்துறை மந்திரி நிதின் ராவத் கூறியதாவது:-

3 மாதத்தில்...

மராட்டியத்தில் 100 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் மின்நுகர்வோர்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக 3 மாதங்களில் முடிவை தெரிவிக்கும்படி மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதேபோல பகல் நேரத்திலும் விவசாய பயன்பாட்டுக்கு மின்வினியோகம் செய்வது குறித்த திட்டத்தையும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்