புதுப்பாளையத்தில் ரூ 12¾ லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்
புதுப்பாளையத்தில் ரூ 12¾ லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய தொகுப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பத்மாவதி, முன்னாள் மத்திய மந்திரி ஆர்.வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி வரவேற்றார்.
விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடம், கல்வெட்டை திறந்து வைத்து பேசினார்.
இதில் மாவட்ட கவுன்சிலர்கள் பூங்கொடிதிருமால், கோவிந்தராஜன், மேற்கு ஆரணி ஒன்றியக்குழு துணைத்தலைவர் வேலாயுதம், ஆவின் துணைத்தலைவர் பாரிபாபு, கல்வி மாவட்ட அலுவலர் சம்பத், வட்டார கல்வி அலுவலர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ் செல்வன் நன்றி கூறினார்.