நெல்லையில் முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது.

Update: 2020-02-08 22:30 GMT
நெல்லை, 

நெல்லையில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச திருவிழா 

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலையில் சுவாமி–அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. 10 மணிக்கு குடவறை கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி முருகனை வழிபட்டனர்.

சாலை குமாரசாமி கோவில் 

இதேபோல் நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி சுவாமிக்கும், சண்முகருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு சிறப்பு கும்ப பூஜையும், சிறப்பு வேள்வி பூஜையும் நடந்தது. காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நெல்லை வண்ணார்பேட்டை குட்டத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில், திரிபுராந்தீசுவரர் கோவிலில் உள்ள முருகருக்கும், சண்முகருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

மேலும் செய்திகள்