பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் 84-வது மகா சிவராத்திரி பஞ்ச லிங்கம் தரிசனம்
விஷ்வ வித்யாலயம் சார்பில் நேற்று 84-வது மகா சிவராத்திரியை முன்னிட்டு பொது மக்களுக்கு பஞ்ச லிங்கம் தரிசன காட்சி இலவச அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை,
பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் நேற்று 84-வது மகா சிவராத்திரியை முன்னிட்டு பொது மக்களுக்கு பஞ்ச லிங்கம் தரிசன காட்சி இலவச அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை சூளை வியாபாரிகள் சங்கம் கட்டிட வளாகத்தில் வைத்து நேற்று பிரம்மா குமாரிகள் இயக்கம் ரத்தன் பஜார் கிளை நிலைய பொறுப்பாளர் கீதா தொடங்கிவைத்தார்.
இதையடுத்து பொது மக்களின் தரிசனத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஞ்ச லிங்க தரிசன காட்சியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பொன் கிருஷ்ணமூர்த்தி தொடங்கிவைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்தார். அதில் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிவை லிங்கங்களாக காட்சிப்படுத்தப்பட்டது.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த ராஜயோக தியான அரங்கு, ஆன்மிக படவிளக்க கண்காட்சி, வாழ்விற்கு நல்வழிகாட்டும் புத்தக அரங்கு, சிவராத்திரி பற்றிய ஒளிகாட்சியை பொது மக்கள் பார்வையிட்டனர். அவர்களுக்கு பிரம்ம குமாரிகள் இயக்கத்தை சார்ந்தவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை சவாலுடன் சந்திப்பதற்காவும், மனசோர்வு, மனஅழுத்தம் நீங்குவதற்காவும் சொற்பொழிவாற்றினர்.
தொடர்ந்து மார்ச் மாதம் வரை பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் பல்வேறு ஆன்மிக சொற்பொழிவுகள், தியான வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் எழும்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கே.எஸ். ரவிசந்திரன், சூளை வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.