சங்கரன்கோவில் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
சங்கரன்கோவில் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னஒப்பனையாள்புரத்தை சேர்ந்தவர் முருகன். தனியார் வங்கி ஊழியர். இவருடைய மனைவி தேன்மொழி (வயது 25). இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
முருகனின் குடும்பத்தினருக்கும், தேன்மொழிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்து காணப்பட்ட தேன்மொழி சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.
அவரின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தேன்மொழியை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தேன்மொழி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேன்மொழிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே விசாரணை நடத்தி வருகிறார்.