கள்ள நோட்டு மாற்ற முயன்றவருக்கு 37 ஆண்டுகள் சிறை காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு
கள்ள நோட்டு மாற்ற முயன்றவருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
காஞ்சீபுரம்,
சின்ன காஞ்சீபுரம் சேதுராயர் தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு பாலுச்செட்டிசத்திரம் அருகே ஆறு 100 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றார். இது குறித்து தகவல் அறிந்த பாலுச்செட்டிசத்திரம் போலீசார் விரைந்து சென்று சுதர்சனை கைது செய்தனர்.
இந்த வழக்கு, காஞ்சீபுரம் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு வக்கீல் இளவரசு ஆஜரானார், வழக்கை மாவட்ட விரைவு கோர்ட்டு நீதிபதி கயல்விழி விசாரித்து, கள்ளநோட்டு மாற்ற முயன்ற சுதர்சனுக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.