குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்கூட்டம்

குளச்சலில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2020-02-06 20:30 GMT
குளச்சல், 

குளச்சல் நகர த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் நடந்தது. நகர தலைவர் பயாஸ் முகம்மது ஹக்கீம் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் பொருளாளர் சுலைமான் வரவேற்று பேசினார். மாவட்ட ஜமாத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம்.ஏ.கான், குளச்சல் முஸ்லிம் முகல்ல தலைவர் பஷீர் கோயா, மாவட்ட த.மு.மு.க. செயலாளர் திருவை செய்யது, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, எஸ்.டி.பி.ஐ.நகர தலைவர் நிசார், நகர்மன்ற முன்னாள் தலைவர் நசீர்,நகர தி.மு.க.பொறுப்பாளர் ரகீம்,ஜாக் நகர தலைவர் ஹபீப் பிர்தவுசி, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் நிசார் கபீர், சுல்பிக்கர் ஆகியோர் உரையாற்றினர்.

மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக், அய்யா தர்மயுக வழி பேரவை நிறுவன தலைவர் பாலமுருகன், கிறிஸ்தவ ஐக்கிய பேரவை இளைஞர் அணி செயலாளர் அருமனை ஸ்டீபன், த.மு.மு.க.தலைமை பிரதிநிதி காதர் மைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் செய்திகள்