சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் ரொட்டியில் மறைத்து கைதிக்கு கஞ்சா கொடுத்த 2 பேர் கைது

சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் ரொட்டியில் மறைத்து கைதிக்கு கஞ்சா கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-02-05 22:30 GMT
சென்னை,

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சாதிக் பாட்‌ஷா (வயது 28). இவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை இவரது நண்பர்களான ராயப்பேட்டையைச் சேர்ந்த இம்பியாஸ் (19), சையது சமீது (19) ஆகிய இருவரும் சைதாப்பேட்டை சப்-ஜெயிலுக்கு சென்றனர்.

அங்கு சாதிக் பாட்‌ஷாவை ஜெயில் அதிகாரிகள் முன்னிலையில் பார்த்து பேசினார்கள். அப்போது ரொட்டி பொட்டலம் ஒன்றை சாதிக் பாட்‌ஷாவிடம் கொடுத்தனர்.

கஞ்சா பொட்டலம்

அப்போது ரொட்டி பொட்டலம் மீது ஜெயில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதை பிரித்து பார்த்தனர். ரொட்டிக்குள் 50 கிராம் கஞ்சா, பீடி பாக்கெட்டுகள் மற்றும் சிகரெட்டை பற்ற வைக்கும் ‘லைட்டர்’ ஆகிவை இருந்தன. கோட்டூர்புரம் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோட்டூர்புரம் போலீசார் விரைந்து வந்து ரொட்டியில் மறைத்து கொடுக்கப்பட்ட கஞ்சா பொட்டலங்களையும், பீடி கட்டுகளையும், சிகரெட் லைட்டரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சாதிக் பாட்‌ஷாவின் நண்பர்கள் இம்பியாஸ், சையது சமீது ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்