நாகையில், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகையில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-05 07:34 GMT
நாகப்பட்டினம், 

நாகை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க நாகை கிளைச்செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் வைத்தியநாதன், ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வளர்ச்சி அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் வடிவேலு கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய மக்களின் சேமிப்பை இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு திரட்டி தரும் எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது தேச விரோதம். 60 ஆண்டு காலமாக அனைத்து மக்களின் சேமிப்பை அரசிற்கு பயன்பட செய்த எல்.ஐ.சி.யை பாதுகாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர். முன்னதாக மதியம் 12 மணி முதல் 1 மணி வரை வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதில் முதுநிலை அதிகாரிகள் வளர்ச்சி சங்கம், முகவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்