பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 22 யூனிட் மணல் பறிமுதல்
கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 22 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
சேத்துப்பட்டு,
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொரால்பாக்கம் கிராமம் அருகே செய்யாறு ஆற்றுப்படுகை உள்ளது. இதில் இருந்து 22 யூனிட் மணல் கடத்தி வந்து கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்து இருப்பதாக போளூர் தாசில்தார் ஜெயபாலுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவர் நேரில் சென்று பதுக்கி வைத்து இருந்த மணலை பறிமுதல் செய்து சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எழிலரசு, ரபியுல்லா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் 22 பயனாளிகளுக்கு 1 யூனிட் வீதம் 22 யூனிட் மணல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் பிரித்து கொடுக்கப்பட்டது.