குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
செங்கத்தில் குறைதீர்வு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.
செங்கம்,
செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 11 மணியாகியும் முக்கிய துறையின் அதிகாரிகள் வரவில்லை என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளும் முழுமையாக வருவதில்லை, விவசாயிகளின் குறைகளை கேட்டு கோரிக்கைகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என வந்திருந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் குறைதீர்வு நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். அதிகாரிகள் வராதது குறித்து கலெக்டரிடம் முறையிட போவதாக கூறி விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
பின்னர் அவர்கள் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நடந்த சம்பவம் குறித்து கூறினர்.