கன்னியாகுமரியில் ரூ.3½ கோடியில் கடற்கரை சீரமைக்கும் பணி தொடங்கியது
கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மூன்று கடலும் சந்திக்கும் கன்னியாகுமரியை நாட்டின் முக்கிய தீர்த்தங்களில் ஒன்றாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கன்னியாகுமரி,
சாதுக்கள், துறவிகள் கடலில் நீராடும் வகையில் முக்கடல் சந்திக்கும் பகுதி சீரமைக்கப்படுகிறது. மேலும் தினமும் கடலுக்கு ஆரத்தி வழிபாடு நடத்தும் வகையில் மத்திய சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 50 லட்சத்தில் கன்னியாகுமரி கடற்கரை சீரமைக்கப்படுகிறது.
இந்த பணி நேற்று தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.