வேளாண் விற்பனைக்குழு ஊழியர்கள் போராட்டம் விவசாயிகள் காய்கறிகளை தரையில் கொட்டியதால் பரபரப்பு
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி வேளாண் விற்பனைக்குழு ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காய்கறிகளை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுவையில் வேளாண் விற்பனைக்குழு 1978-ம் ஆண்டு தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துடன் தொடங்கப்பட்டது. அதன்பின் மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர், மடுகரை ஆகிய இடங்களிலும் தொடங்கப்பட்டது. புதுவை, லாஸ்பேட்டை, அரியாங்குப்பம் உழவர்சந்தைகளிலும் வேளாண் விற்பனைக்குழு இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் 165 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 13 மாதத்துக்கான சம்பளம் நிலுவையில் உள்ளது. இந்த சம்பளத்தை வழங்கக்கோரி அவர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
அவர்களுக்கு சம்பளம் வழங்க தலைமை செயலகத்துக்கு அனுப்பப்பட்ட கோப்புக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதனால் புதுவை விற்பனைக்குழு ஊழியர்கள் நலச்சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதனால் உழவர்சந்தைக்கு காலையில் ஊழியர்கள் பணிக்கு வந்து விவசாயிகளுக்கு விளைபொருட்களின் விலையை நிர்ணயித்து, தராசுகள் வழங்கவில்லை.
பணிகளை புறக்கணித்த ஊழியர்கள் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள உழவர்சந்தை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உழவர்சந்தைக்கு பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தராசு, எடைக்கற்கள் கிடைக்காத நிலையில் அவர்கள் காய்கறிகளை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள் காய்கறிகளுக்கு தாங்களாகவே விலையை நிர்ணயித்து விற்பனை செய்தனர்.
லாஸ்பேட்டை உழவர்சந்தையிலும் இதே நிலை நீடித்ததால் விற்பனைக்குழு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உழவர்சந்தையை இயங்க செய்தனர்.
இதேபோல் தட்டாஞ்சாவடி விற்பனைக்குழுவில் உள்ள ஊழியர்களும் ஒட்டுமொத்தமாக பணிகளை புறக்கணித்தனர். இதனால் விவசாய விளைபொருட்கள் எடைபோடப்படாமல் குவிந்து கிடந்தன.
பணிகளை புறக்கணித்த ஊழியர்கள் சம்பளம் வழங்கக்கோரி விற்பனைக்குழு வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் துரைசெல்வம் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் வாழ்த்தி பேசினார். ஊழியர் சங்க செயலாளர் சண்முகம் உள்பட நிர்வாகிகள் பலரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.