பழிக்கு பழியாக பஞ்சாயத்து தலைவர் படுகொலை சென்னை கூலிப்படையினர் 3 பேர் கைது
பழிக்கு பழியாக பஞ்சாயத்து தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக சென்னை கூலிப்படையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் ஊஞ்சக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 48). அ.தி.மு.க. பிரமுகரான இவர் சங்கராபாளையம் பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.
இவருடைய மனைவி சுமதி (40). இவர்களுக்கு காவியா (22), ரசிகப்பிரியா (15) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் காவியா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ரசிகப்பிரியா அந்தியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் ராதாகிருஷ்ணன் சங்கராபாளையத்தை அடுத்த செல்லம்பாளையம் பகுதிக்கு நேற்று காலை மோட்டார்சைக்கிளில் வந்தார். பின்னர் அங்குள்ள ஒரு பள்ளியின் அருகே ரோட்டோரம் நின்று கொண்டிருந்தார்.
படுகொலை
அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் ராதாகிருஷ்ணனை சூழ்ந்தது. இதைக்கண்டதும் சுதாரித்த ராதாகிருஷ்ணன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் ராதாகிருஷ்ணனை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்றது.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
இதுபற்றி அறிந்ததும் வெள்ளித்திருப்பூர் போலீசார் விரைந்து சென்று ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ‘ராதாகிருஷ்ணன் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்தில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு சங்கராபாளையத்தில் நடந்த சேகர் என்பவர் கொலை வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு உள்ளது. இந்த கொலைக்கு பழிக்கு பழியாக கூலிப்படையை வைத்து ராதாகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காரில் தப்பி சென்ற கூலிப்படையை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
கைது
இதற்கிடையே கவுந்தப்பாடி அருகே உள்ள தர்மாபுரி பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் காரில் இருந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர். இதில் 3 பேர் பிடிபட்டனர். ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட 3 பேரையும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த சரவணன், பாலமுருகன், ராஜேஷ் என்பதும், கூலிப்படையை சேர்ந்த இவர்கள் ராதாகிருஷ்ணனை வெட்டி கொலை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், கொலைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.