மோட்டார் சைக்கிள் விபத்தில் வேன் டிரைவர் சாவு
கரூர் ஜெகதாபி கிராமம் குப்பகவுண்டனூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
வெள்ளியணை,
சந்திரசேகர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் கரூர் சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது உப்பிடமங்கலம் அருகே உள்ள புது கஞ்சமனூர் பகுதியில் நின்று கொண்டிருந்த வேன் மீது சந்திரசேகர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.