விவசாயிகள் பின்னோக்கி நடந்து சென்று கலெக்டரிடம் மனு

பட்டா மாறுதல் முகாம் நடத்தக்கோரி விவசாயிகள் பின்னோக்கி நடந்து சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2020-02-03 22:00 GMT
திருவண்ணாமலை, 

கிராமப்புறங்களில் பட்டா மாறுதல் முகாம் நடத்தக்கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் பின்னோக்கி நடந்து வந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் புருஷோத்தமன், சிவகுமார், மனோகர், சுப்பிரமணியன், அய்யாயிரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கிராமப்புறங்களில் பட்டா மாறுதல் முகாம் நடத்த வேண்டும். 100 நாள் வேலை வழங்க வேண்டும். சாகுபடி நிலங்களை தரிசாக மாறுவதை கண்காணிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்