நாட்டறம்பள்ளி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 யூனிட் மணல் பறிமுதல்
நாட்டறம்பள்ளி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி,
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் செட்டேரி அணை பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலஙகளில் இருந்து டிராக்டர் மூலம் மணல் கடத்தி வந்து, செட்டேரி அணையில் பதுக்கி வைத்திருப்பதாக நாட்டறம்பள்ளி வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் தாசில்தார் உமாரம்யா தலைமையில் வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் அனுமுத்து மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 யூனிட் மணலை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.