இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் அமைச்சர் ஷாஜகான் வலியுறுத்தல்
இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று அமைச்சர் ஷாஜகான் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு போக்கு வரத்து துறை சார்பில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 27-ந் தேதி தொடங்கி நேற்று வரை கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதன் நிறைவு விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று மாலை கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடந்தது. விழாவிற்கு போக்கு வரத்து துறை அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் முக்கியமான 3 விஷயங்களை வலியுறுத்தி வருகிறோம். சாலையில் வாகனங்களில் செல்லும் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. வாகனத்தில் செல்லும் போது செல்போன்கள் பேசிக்கொண்டே சென்றால் கவனச்சிதறல் ஏற்படும். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி உயிர் இழந்தவர்களில் அதிகம் தலையில் அடிபட்டு இறந்தவர்கள் தான். எனவே தான் புதுவை மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு கட்டாய ஹெல்மெட் என்ற சட்டத்தை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு சமூக அமைப்புகளும், பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பெண்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அந்த சட்டம் கைவிடப்பட்டது.
எல்லாவற்றிற்கும் அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அவசியம் இல்லை. பொதுமக்களிடம் விழிப்புணர்வு வர வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதற்கு இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
இதே போல் கார்களில் செல்வோர் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். ஒரு கார் வாங்கும் போது அதில் ஏர்பேக் இருக்கிறதா? என்று கேட்டு வாங்குகின்றனர்.
சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டினால் தான் ஏர்பேக் வேலை செய்யும். எனவே இதனை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும். ஒரு விபத்து ஏற்படும் போது அது வாகன ஓட்டிகளை மட்டும் பாதிப்பது இல்லை. எதிரே வருபவர்களையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் பெரிய அளவில் பாதிக்கிறது. எனவே விபத்துகள் ஏற்படாமல் இருக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மாணவர்கள் இது குறித்து பொதுமக்களுக்கும், தங்கள் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம் நடந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.