வானூர் தாலுகாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பணி கலெக்டர் ஆய்வு
வானூர் தாலுகாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பணியை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பணி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி வானூர் தாலுகாவிற்குட்பட்ட ஓமந்தூர், தென்கோடிப்பாக்கம், கொண்டாமூர் ஆகிய ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணியை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்காளர் பெயர், வயது, இடம் ஆகியவை சரியான முறையில் உள்ளதா? என்பதை வீடு, வீடாக சென்று பார்வையிட்டார்.
அடிப்படை வசதிகள்
மேலும் மேற்கண்ட 3 ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் வசதி, தெரு மின்விளக்கு வசதி, சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும், ரேஷன் கடைகளில் அரசால் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, எண்ணெய் ஆகியவை முறையாக வழங்கப்படுகிறதா எனவும், தரமாக உள்ளதா என்பதையும் பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது திண்டிவனம் சப்-கலெக்டர் அனு உள்பட பலர் உடனிருந்தனர்.