பெருந்துறையில் 55 அரங்குகளுடன் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நாளை நிறைவடைகிறது
பெருந்துறையில் 55 அரங்குகளுடன் நடந்து வரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) நிறைவடைகிறது.
ஈரோடு,
சதர்ன் டிரேடு விஷன் நிறுவனம் சார்பில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி பெருந்துறை ஈரோடு ரோட்டில் உள்ள பழனி ஆண்டவர் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான வீட்டு உபயோக பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. இதுகுறித்து கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-
வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியில் 55 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முன்னணி நிறுவனத்தின் கியாஸ் அடுப்பு, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களும், மின்விளக்குகள், அலங்கார மின் விளக்குகளும் வைக்கப்பட்டு உள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் ஆகிய பொருட்களும், பெண்களுக்கான அழகுசாதன பொருட்களும் சலுகை விலையில் வழங்கப்படுகிறது.
மீன்கள் கண்காட்சி
காய்கறிகளை நறுக்கும் கருவி, புத்தகங்கள், ஜவுளிகள், பெல்ட், ராசிக்கல் மோதிரம், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியன கிடைக்கிறது. ஊறுகாய், மிட்டாய் வகைகள் போன்ற உணவு பொருட்களும் விற்பனைக்கு உள்ளன. உணவு திருவிழா தனியாக நடத்தப்படுகிறது. இதில் டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி போன்ற சுவையான பொருட்கள் சுடச்சுட வழங்கப்படுகிறது.
சிறுவர்-சிறுமிகளுக்கு 3-டி, 7-டி காட்சிகள் இலவசமாக பார்க்க அனுமதிக்கப்படுகிறது. மெகந்தி, டாட்டூ ஆகியன இலவசமாக போட்டுத்தரப்படும். மேலும் கண்களுக்கு விருந்தாக அழகிய மீன்கள் கண்காட்சி நடக்கிறது. இதில் குடும்பத்துடன் வந்து பார்வையிடுபவர்களுக்கு ஒரு வளர்ப்பு மீன் வழங்கப்படும். குழந்தைகளுக்கான விளையாட்டுகள், பெரியவர்களுக்கான அதிர்ஷ்ட விளையாட்டுகள் உள்ளன. பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.