குடியுரிமை திருத்த சட்ட விளக்க பொதுக்கூட்டம்
கூடுவாஞ்சேரியில் பா.ஜ.க. சார்பில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பா.ஜ.க. சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை விளக்கியும் ஆதரவு தெரிவித்தும் பிரசார பொதுக்கூட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூர் நகர தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகுமார், ராஜதேவன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தலைவர் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சென்னை பா.ஜ.க. கோட்ட இணை பொறுப்பாளர் வக்கீல் திருநாவுக்கரசு கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசினார். இதில் முன்னாள் நகர தலைவர் வி.மோகன்குமார், உள்பட பலர் கலந்துகொண்டனர்.