புதுச்சேரியில் நித்யானந்தா சீடர் கொலை: மதுரை கோர்ட்டில் 7 பேர் சரண்

புதுச்சேரியில் நித்யானந்தா சீடர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் மதுரை ஐகோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2020-01-31 22:45 GMT
மதுரை,

புதுச்சேரி மாநிலம், ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரவேல் (வயது 51). நித்யானந்தாவின் தீவிர சீடரான இவர் ஏம்பலம் மற்றும் வில்லியனூர் பகுதிகளில் பேக்கரி நடத்தி வந்தார்.

சமீபத்தில் ரூ.2 லட்சம் பணத்துடன் காரில் சென்ற வஜ்ரவேல், வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் குருவிநத்தம் பகுதியில் நின்று கொண்டு இருந்த காரில் வஜ்ரவேல் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பணத்தகராறில் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடிகள் தான் வஜ்ரவேலை கடத்தி கொலை செய்தனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை கும்பலை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த விஜய் (வயது 23), அசோக் (21), மாதவன் (25), சரத்குமார் (23), ராஜதுரை (26), அய்யனார்(26), சரபாலன் (22) ஆகிய 7 பேர் மதுரை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை வருகிற 6-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு முத்துராமன் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்களை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

மேலும் செய்திகள்