மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரத்தில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.

Update: 2020-01-31 22:15 GMT
காஞ்சீபுரம்,

மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு போட்டிகளை நடத்தியது. இதில் தடகளப் போட்டிகள், கை-கால் பாதிப்புற்றோருக்கான ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

மேலும் குழுப்போட்டிகளில் கை-கால் பாதிப்புற்றோருக்கு இறகு பந்து, மேஜை பந்து, மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் காது கேளாதோருக்கான கபடி, போட்டி ஆகியவை நடைபெற்றன.

இந்த போட்டிகள் ஒவ்வொன்றிலும் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்படும். இந்த போட்டிகளில் முதல் இடத்தை பெறுவோர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சுப்பிரமணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி தே.சுப்பிரமணி, காஞ்சீபுரம் மாவட்ட மனித உரிமைகள் ஆணைய தலைவர் முத்தமிழ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்படபலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்