அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிப்பு
அ.தி.மு.க.-தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
குத்தாலம்,
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர் அபுதாகீர் வரவேற்றார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி ஆகியோர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் நகர செயலாளர்கள் அலி, கிருஷ்ணமூர்த்தி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூர் செயலாளர் போகர்ரவி, ஒன்றியக்குழு துணை தலைவர் மகேஸ்வரி முருகவேல், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் பங்கஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமை தாங்கினார். நகர செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சத்தியேந்திரன், வக்கீல் தணிகை பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்னம்பந்தல் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் வரவேற்றார். இதில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் கலந்து கொண்டு சாரங்கபாணி நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல் மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் சார்பில் அதன் நிர்வாகி பேராசிரியர் தமிழ்வேல் உள்பட நிர்வாகிகள் சாரங்கபாணி நினைவு தூணுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.