தேனி எம்.பி. கார் தாக்கப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் 11 இடங்களில் அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் சாலை மறியல்
தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் கார் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாவட்டத்தில் 11 இடங்களில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி,
தேனி மாவட்டம், கம்பத்தில் நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க சென்ற தேனி எம்.பி.யும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமாகிய ரவீந்திரநாத்குமாருக்கு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டினர்.
அப்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ரவீந்திரநாத்குமாரை கண்டித்து அவருடைய காரை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது சிலர் அவருடைய காரை தாக்கினர். மேலும் அவருடைய காருக்கு பின்னால் வந்த பா.ஜ.க மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜபிரபுவின் காரும் தாக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்து பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி, கம்பம் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று காலையில் மேலும் சில இடங்களில் சாலை மறியல் நடந்தது.
தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் தேனி நகர அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார், பா.ஜ.க. மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. எம்.பி.யின் கார் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
போடி பஸ்நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் நேற்று சாலைமறியல் செய்தனர். அப்போது அவர்கள் மதவாத சக்திகளை கைது செய்ய கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் ரவீந்திரநாத்குமார் எம்.பி.யின் உயிருக்கு ஆபத்து உள்ளதால் அவருக்கு மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி, நகர செயலாளர் பழனிராஜ், அவைத்தலைவர் கனல் காந்தி மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
கடமலைக்குண்டுவில் தேனி சாலையில் கடமலை-மயிலை வடக்கு ஒன்றிய செயலாளர் கொத்தாளமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடமலைக்குண்டு போலீசார் அங்கு விரைந்து சென்று அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக தேனி சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பெரியகுளத்தில் நேற்று காலை அ.தி.மு.க மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, அன்னப்பிரகாஷ், நகர செயலாளர் ராதா, துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.
ஆண்டிப்பட்டியில் நேற்று அ.தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் ஆகியோர் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கட்சி கொடியை ஏந்தியபடி, எம்.பி.யின் காரை தாக்கிய நபர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.
இதுபோல் சின்னமனூர், பழனிசெட்டிபட்டி, உத்தமபாளையம், கூடலூர், நாகலாபுரம் உள்பட மாவட்டத்தில் 11 இடங்களில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்கள் தேனி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.