அரசுப்பள்ளிக்கு தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி

அரசுப்பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக 10-ம் வகுப்பு மாணவி அலங்கரித்தார்.

Update: 2020-01-24 22:00 GMT
மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 75 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று தலைமை ஆசிரியர் இருக்கையில் காவ்யா என்ற மாணவி அலங் கரித்தார். 10-ம்வகுப்பு மாணவியான அவர் உத்தரவுகள் பிறப்பிக்க மற்ற மாணவ-மாணவிகள் கேட்டு நடந்தனர். முன்னதாக தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் காவ்யாவை வரவேற்று தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டனர். தலைமை ஆசிரியர் பணி குறித்து மாணவிக்கு, விநாயக மூர்த்தி விளக்கினார். அதன்பின் ஆசிரியர்களுடன் காவ்யா ஆலோசனை நடத்தினார். பின்னர் ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று ஆய்வு செய்தார். மாணவ-மாணவிகளிடம் படிப்பு மட்டுமின்றி விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாணவி தலைமை ஆசிரியையானது எப்படி? என்பது குறித்து கேட்ட போது, நேற்று பெண் குழந்தைகள் தினம் என்பதால் அதன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாணவி ஒருவரை ஒரு நாள் தலைமை ஆசிரியை யாக நியமித்துள்ளனர்.

அந்த வாய்ப்பு மாணவி காவ்யாவுக்கு கிடைத்துள்ளது. அதாவது, வருகை பதிவு, சக மாணவ, மாணவியர்களிடம் பழகும் மனப்பான்மை, பிறருக்கு உதவி செய்தல் போன்றவற்றில் சிறந்து விளங்கியதால் காவ்யாவை ஒரு நாள் தலைமை ஆசிரியையாக தேர்வு செய்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதையொட்டி ஐம்பெரும் விழா பள்ளியில் கொண்டாடினர். அப்போது பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்வி சீராக மிளகனுார் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமகிருஷ்ணன் தலைமையில் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கினர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவ-மாணவிகளுக்கு ஷுக்கள் வழங்கப்பட்டன. பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. விழா முடிவில் ஆசிரியை கீதா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்