நவநிர்மாண் சேனா கட்சிக்கு புதிய கொடி ராஜ்தாக்கரே அறிமுகம் செய்தார்

நவநிர்மாண் சேனாவுக்கு புதிய கொடியை ராஜ்தாக்கரே அறிமுகம் செய்து வைத்து உள்ளார்.

Update: 2020-01-23 23:04 GMT
மும்பை,

மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் கூட்டம் மும்பை கோரேகாவில் நடந்தது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவா் ராஜ்தாக்கரே கலந்துகொண்டு பால்தாக்கரே, வீர சாவர்க்கர், சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர் ஆகியோரின் உருவபடங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தொண்டர்கள் இடையே கட்சியின் புதிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.

காவி நிறத்தில் உள்ள அந்த கொடியின் மைய பகுதியில் சத்ரபதி சிவாஜி காலத்தில் பயன்படுத்தப்பட்ட ராஜமுத்திரை இடம்பெற்றுள்ளது.

கொள்கை மாற்றமா?

நவநிர்மாண் சேனாவின் பழைய கொடி காவி, நீலம் மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நவநிர்மாண் சேனா மதச்சார்பற்ற இயக்கம் என்பதை வெளிப்படுத்தும் வகையிலேயே அந்த கட்சியின் கொடி 3 வண்ணங்களில் இருந்தது. தற்போது கொடி காவி நிறத்துக்கு மாறி இருப்பதை அடுத்து அவர்களின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்