இந்திய குடியுரிமை திருத்த சட்ட அவசியம் குறித்து பிரசார இயக்கம்

இந்திய குடியுரிமை திருத்த சட்ட அவசியம் குறித்து பிரசார இயக்கம்.

Update: 2020-01-23 22:30 GMT
மீன்சுருட்டி,

பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் இயக்கம் நடந்து வருகிறது. இந்த பிரசார இயக்கத்திற்கு மாவட்ட தலைவர் ராம் சந்திரசேகர் தலைமை தாங்கினார். திருச்சி கோட்ட தலைவர் ராமகிருஷ்ணா சிவசுப்ரமணியம், பெரம்பலூர் ரெங்கா நகரில் இருந்து பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து வடக்குமாதவி சாலை, எழில்நகர், எளம்பலூர் சாலை, பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், துறைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க.வினர் வீடு வீடாக சென்று, இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின் அவசியம் மற்றும் இந்திய இறையாண்மைக்கும், தேச பாதுகாப்பிற்கும் அரணாக உள்ள சரத்துகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர். இந்த பிரசாரத்தில் ராமநாதபுரம் கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நகர பா.ஜ.க. தலைவர் பார்த்தசாரதி, சத்தியபிரபு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் பா.ஜ.க. தொண்டர்கள் தங்களது கிராமங்களில் உள்ள வீடுகள் தோறும் சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும், இந்த பிரசார இயக்கம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் என்றும் மாவட்ட தலைவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்