வாடிக்கையாளர்களுக்கு வீட்டை ஒப்படைக்காத கட்டுமான அதிபர் 18 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு

வாடிக்கையாளா்களுக்கு வீட்டை ஒப்படைக்காத கட்டுமான அதிபர் 18 சதவீத வட்டியுடன் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-01-20 22:00 GMT
தானே,

கட்டுமான அதிபர் சுஷில் ஷிண்டே என்பவர் கல்யாண் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டுவதாக அறிவித்தார். எனவே அவரின் கட்டிடத்தில் வீடுகளை வாங்க வாடிக்கையாளர்கள் தலா ரூ.22 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த 2014-ம் ஆண்டு வழங்கி இருந்தனர்.

இதில் கட்டுமான அதிபர் 16 பேருக்கு சொன்னதுபோல வீட்டை கட்டி ஒப்படைக்கவில்லை. மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட 10 பேர் தானே நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

18 சதவீத வட்டியுடன்...

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், கட்டுமான அதிபர் வீட்டுக்காக பணம் வாங்கியவர்களிடம் அதை 18 சதவீத வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டும் அல்லது உறுதி அளித்ததின்படி வீட்டை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல், மன ரீதியாக துன்புறுத்தியதற்காக தலா ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும், சட்ட செலவுக்கு தலா ரூ.10 ஆயிரத்தையும் இழப்பீடாக வழங்கவும் கட்டுமான அதிபருக்கு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே மோசடி வழக்கில் கட்டுமான அதிபர் சுஷில் ஷிண்டேவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தானே கோர்ட்டு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்