நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது கி.வீரமணி பேச்சு
நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு மக்களிடம் இரட்டை வேடம் போடுகிறது என நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி கூறினார்.
நாகர்கோவில்,
நீட் தேர்வு எதிர்ப்பை பற்றி பொதுமக்களிடம் எடுத்து செல்ல நாகர்கோவிலில் இருந்து சென்னை வரை பிரசார பயணம் மேற்கொள்ள திராவிடர் கழகம் முடிவு செய்தது. அதன்படி இந்த பிரசார பயண தொடக்க நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்று மாலை நடந்தது.
மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணேசுவரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார்.
பாலபிரஜாபதி அடிகள்
அப்போது அவர் பேசியதாவது:-
அய்யா வைகுண்டர் அடிமைப்பட்ட மக்களுக்காக போராடியவர். அவரது கொள்கைப்படி பாலபிரஜாபதி அடிகளார் போராடி வருகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். சாதி வேற்றுமையை நீக்க பாடுபட்டவர் பெரியார். தற்போது நமது நாட்டில் சாதி பிரச்சினை தலை தூக்கி உள்ளது. ஆனால் வெளிநாட்டில் சாதி என்பது இல்லை.
தஞ்சை பெரிய கோவிலில் நடக்க இருக்கும் குடமுழுக்கு விழா தமிழில் நடத்த அனுமதியில்லை. மேலும் கோவிலின் உள்ளே ராஜராஜ சோழனின் சிலைக்கும் அனுமதி இல்லை. இதன்மூலம் தமிழுக்கும், தமிழனுக்கும் அங்கு இடமில்லை என்பது தெரிய வருகிறது.
மாநில உரிமை பறிப்பு
புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் தேர்வு ஆகிய கொடுமைகளை மாணவர்கள் அனுபவித்து வருகின்றனர். 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தார்கள். மீதமுள்ள அனைத்துமே உயர் சாதியினர் ஆகும். நமது நாட்டில் தமிழகத்தில் மட்டும்தான் அதிகளவில் அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. ஆனால் இங்கு நம் மக்களுக்கு இடம் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. நீட் தேர்வு மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மருத்துவ படிப்பு மறுக்கப்படுகிறது.
திராவிட கழகம், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நடத்திய பலக்கட்ட போராட்டத்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 61 சதவீதம் இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது. தேர்வு நடத்தும் அதிகாரம் பல்கலைக்கழகத்திடம் உள்ளது. இது மாநில உரிமை. இந்த நீட் தேர்வு மூலம் மாநில உரிமைகளை பறிக்கும் சட்டமாக உருவாகி உள்ளது.
இரட்டை வேடம்
காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. பா.ஜனதா ஆட்சியில் நீட் தேர்வு கட்டாயம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் விதிவிலக்கு கோரும் மாநிலத்துக்கு நீட்தேர்வு இல்லை எனவும் தீர்ப்பில் கூறியிருந்தது. ஜெயலலிதா ஆட்சியில் ஒரு ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. தற்போது உள்ள அ.தி.மு.க. அரசு நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் அ.தி.மு.க. அரசு மக்களிடம் இரட்டை வேடம் போடுவது தெளிவாகி உள்ளது.
இவ்வாறு கி.வீரமணி பேசினார்.
நிகழ்ச்சியில் தி.க. பொதுச்செயலாளர் சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் தயாளன், மண்டல செயலாளர் வெற்றிவேந்தன், காங்கிரஸ் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், தி.க. நிர்வாகிகள் நல்லபெருமாள், சிவதாணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.