விதியைமீறி இயங்கிய ஆந்திரா பஸ் பறிமுதல்; 2 வேன்களுக்கு அபராதம்

வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று அதிகாரிகள், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகனசோதனை நடத்தினர்.

Update: 2020-01-17 22:00 GMT
வேலூர்,

ஆந்திர மாநில தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் அந்த பஸ் விதியைமீறி இயங்கியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பஸ்சை பறிமுதல் செய்தனர்.

அதேபோன்று 2 வேன்களை நிறுத்தி சோதனை செய்ததில் இருக்கைகளை குறைத்து காட்டி வரிசெலுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனால் ஒரு வேனுக்கு ரூ.12,500, மற்றொரு வேனுக்கு ரூ.17 ஆயிரம் என ரூ.29,500 அபராதமும், ரூ.36 ஆயிரம் வரியும் வசூல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்