மொபட் கவிழ்ந்து தொழிலாளி பலி - துக்க வீட்டுக்கு சென்றபோது பரிதாபம்

விளாத்திகுளம் அருகே துக்க வீட்டுக்கு சென்றபோது, மொபட் கவிழ்ந்து தொழிலாளி பலியானார்.

Update: 2020-01-17 22:15 GMT
விளாத்திகுளம், 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூரை அடுத்த வேடநத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 56). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. கோவில்பட்டி அருகே கழுகாசலபுரத்தில் உள்ள முத்தையாவின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். எனவே நேற்று முன்தினம் காலையில் முத்தையா, துக்கம் விசாரிப்பதற்காக உறவினர் வீட்டுக்கு மொபட்டில் புறப்பட்டு சென்றார்.

வேடநத்தம் அருகே அம்பாள் ஊருணி அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மொபட் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், குளத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த முத்தையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளாத்திகுளம் அருகே துக்க வீட்டுக்கு சென்றபோது, மொபட் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்