பொங்கலையொட்டி மாணவர்கள் வழங்கிய கூட்டாஞ்சோறு
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குமிழியம் கிராமத்தில் கூட்டாஞ்சோறு பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
செந்துறை,
குமிழியம் காமாட்சி அம்மன் கோவில் ஆலமரத்தடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த இயற்கை உணவு பொருட்களை கொண்டு பொங்கல் இனிப்பு உணவு, கார உணவு, மோர், ரசம் சாதம், முடக்கற்றான் சூப், மணத்தக்காளி சூப், முருங்கை கீரை சூப், வாழை மீன் வறுவல் ஆகிய இயற்கை உணவுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
மறந்து போன நமது பாரம்பரிய உணவை சாப்பிட்ட அனைவரும் சுவையாகவும், வித்தியாசமான அனுபவமாகவும் இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர்.