காரில் கஞ்சா கடத்திய கல்லூரி பேராசிரியர் கைது சட்டக்கல்லூரி மாணவரும் சிக்கினார்
காரில் கஞ்சா கடத்திய கல்லூரி பேராசிரியர் மற்றும் சட்டக்கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
திரு.வி.க.நகர்,
சென்னை கொரட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின்பேரில், கொரட்டூர் கெனால் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் காரில் 1,400 கிராம் கஞ்சாவும், ரூ.11 ஆயிரமும் இருந்தது. காருடன், கஞ்சா, பணத்தை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள், பாடி சீனிவாசா நகரைச் சேர்ந்த ரிச்சர்டு(வயது 24) என்பதும், அண்ணாநகரைச் சேர்ந்த ராஜராஜன்(22) என்பதும் தெரிந்தது. மேலும் இவர்களில் ரிச்சர்டு, மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருவதும், ராஜராஜன் சட்டக்கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள், இருவரும் கஞ்சாவை காரில் கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா கடத்தியதாக கல்லூரி பேராசிரியருடன், சட்டக்கல்லூரி மாணவர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.