புதுச்சேரியில் முழுஅடைப்பு: பஸ்கள் ஓடாததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு கடை வீதிகள் வெறிச்சோடின
புதுவையில் முழு அடைப்பினை யொட்டி நேற்று பஸ்கள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. கடைகள் மூடப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி,
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, தொழிலாளர் விரோதபோக்கு, புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று பொது வேலைநிறுத்தம் நடந்தது.
அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம், ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், புதிய வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி நேற்று நடந்த முழுஅடைப்பு (பந்த்) போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., ஏ.ஐ.சி.சி.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி, அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.
இதன் காரணமாக புதுவையில் நேற்று 450க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயங்கவில்லை. அரசு சாலை போக்குவரத்துக்கழக பஸ்களும், மினி பஸ்களும் ஓடவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் புதுவையையொட்டி உள்ள தமிழக பகுதிகளான திண்டிவனம், மரக்காணம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கான பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மாநில எல்லையான கோரிமேடு, கன்னியகோவில், கனகசெட்டிகுளம் வரையிலும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் பஸ்களை கொண்டு சென்றுவிட்டனர்.
காலையில் ஒரு சில டெம்போக்களும், ஆட்டோக்களும் இயக்கப்பட்டன. நேரம் செல்லச்செல்ல தொழிற்சங்கத்தினரின் எதிர்ப்பு காரணமாக அவையும் நிறுத்தப்பட்டன. அதேநேரத்தில் தனியார் கல்லூரி பஸ்கள், புதுவை அரசின் மாணவர் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் அவற்றில் குறைந்த அளவிலேயே மாணவர்கள் பயணம் செய்தனர். பெரும்பாலான ஆட்டோ, டெம்போக்களும் ஓடவில்லை. என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என்றாலும் மிகக் குறைவான ஆட்டோக்களே ஓடின.
முழு அடைப்பு காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அரசு பள்ளிகள் இயங்கினாலும் குறைந்த அளவிலேயே மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.
புதுவை நகரப் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஆங்காங்கே சிறிய கடைகள் மட்டும் திறந்திருந்தன. குறிப்பாக குபேர் பஜார், பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட், மீன் மார்க்கெட்டுகள் மூடியே இருந்தன. நேரு வீதி, காந்தி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில இடங்களை தவிர முக்கிய இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டு இருந்ததால் பெட்ரோல் நிரப்ப முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
அதேநேரத்தில் தெருவோர கடைகள் சில இயங்கின. அந்த கடைகளில் மதிய வேளையில் உணவுக்காக கூட்டம் அலைமோதியது. தியேட்டர்களிலும் காலைக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனமும் இந்த போராட்டத்தில் பங்கேற்றதால் வங்கிப்பணிகள் பாதிக்கப்பட்டன. குறைந்த அளவிலேயே ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். இதனால் பண பரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டன.
புதுவை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கின. இருப்பினும் ஊழியர்கள், மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்திருந்தனர்.
2 சக்கர வாகனங்களில் 2-க்கும் மேற்பட்டவர்களாக பயணம் செய்து பணிகளுக்கு சென்றனர். இதனால் நகரப் பகுதியில் 2 சக்கர வாகனங்களின் போக்குவரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.
இந்த போராட்டத்தை அறிவித்த தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து நகரில் 11 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கானோர் கைதாகினர். இந்த முழு அடைப்பு காரணமாக புதுவையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
போராட்டத்தின் போது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன் (கிழக்கு), சுபம் கோஷ் (வடக்கு), ஜிந்தா கோதண்டராமன் (தெற்கு), ரங்கநாதன் (மேற்கு) ஆகியோர் தலைமையில் நகரம், கிராமப்புறங்களில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிற்பகலில் புதுவை அரசு பஸ்களும் இயக்கப்பட்டன. மாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது.
இந்த முழுஅடைப்பினை தொடர்ந்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில், மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் நடந்த முழுஅடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்த தொழிலாளர்கள், வணிகர்கள், பள்ளிகள், பஸ், டெம்போ, ஆட்டோ, லாரி உரிமையாளர்கள், விவசாய தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.