கே.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் வெளிநாட்டில் பதுங்கியிருந்த சர்வதேச சூதாட்ட தரகர் கைது

கே.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் வெளிநாட்டில் பதுங்கி யிருந்த சா்வதேச சூதாட்ட தரகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-01-06 23:12 GMT
பெங்களூரு,

கர்நாடக பிரிமீயர் லீக் (கே.பி.எல்.) கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை வீரர்கள், உரிமையாளர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், கே.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடைய சர்வதேச சூதாட்ட தரகரான அரியானாவை சேர்ந்த ஜட்டின் என்பவர் வெளிநாட்டில் தலைமறைவாகி இருந்தார். இந்த வழக்கில் வீரர்கள், உரிமையாளர்கள் கைதானவுடன் அவர் வெளிநாட்டுக்கு சென்று பதுங்கிவிட்டார்.

இதனால் அவர் தேடப்டும் நபராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து பெங்களூருவுக்கு ஜட்டின் வந்தார். இதனை அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து ஜட்டினை கைது செய்தனர். ஆனால் அவர் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றிருந்ததால், உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே, போலீசார் உடனடியாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஜட்டினுக்கு நோட்டீசு வழங்கினார். பின்னர் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கே.பி.எல். கிரிக்கெட் போட்டியை தவிர பல்வேறு நாடுகளில் நடக்கும் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர்களிலும் ஜட்டின் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்