காதலரிடம் இருந்து பிரித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காதலரிடம் இருந்து பிரித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-01-06 22:45 GMT
தேன்கனிக்கோட்டை, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜோகட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகா‌‌ஷ். இவருடைய மகன் ஆ‌ஷா (வயது 19). இவரும், பஞ்சாட்சிபுரத்தை சேர்ந்த ரஜினி என்ற வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஆ‌ஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆ‌ஷா வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் ரஜினியின் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். நேற்று முன்தினம் ரஜினி வேலைக்கு சென்று விட்டார். அப்போது ஆ‌ஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆ‌ஷாவின் பெற்றோர் அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. காதலரிடம் இருந்து பெற்றோர் பிரித்தால் மனமுடைந்த ஆ‌ஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் ஆ‌ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்