தமிழகத்தில் இந்த ஆண்டு அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டம் அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் இந்த ஆண்டு அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நெல்லை,
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுவதற்காக விலையில்லா மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால் பால் வளத்தில் புரட்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 2¼ லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு தலா 25 கோழி வழங்கப்படுகிறது. 1½ லட்சம் பேருக்கு வெள்ளாடு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் விலையில்லா ஆடுகளும் வழங்கப்படுகின்றன. கால்நடை பராமரிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.
தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறது என்பதை இந்த உள்ளாட்சி தேர்தல் உறுதி அளித்துள்ளது. இந்த தேர்தல் மூலம் மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள்.
ஜல்லிக்கட்டு
மக்களின் நலனில் இந்த அரசு எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. போட்டிகள் நடக்கும்போது பாதிப்பு ஏற்படும் கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 750 காளைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கூடுதலாக காளைகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.