கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஒற்றைக்காலில் நின்று சாலை மறியல் 62 பேர் கைது
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஒற்றைக்காலில் நின்று சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மகா சபையினர் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்,
சிதிலம் அடைந்து காணப்படும் கோவில்களில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கும்பகோணம் வியாழசோமேஸ்வரர் கோவிலில் தரமற்ற முறையில் கொடி மரம் அமைத்து அது முறிந்து விழுவதற்கு காரணமாக இருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் அருகே அசூர் பைபாஸ் சாலையில் நேற்று அகில பாரத இந்து மகா சபை சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
ஒற்றைக்காலில் நின்று...
போராட்டத்துக்கு இந்து மகா சபை மாநில தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் களஞ்சேரி சாம்பசிவம், கோவில் பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம நிரஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின்போது இந்து மகா சபையினர் ஒற்றைக்காலில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது சிலர் ஒற்றைக்காலில் நின்று சங்கு ஊதியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அசோகன், இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், நாகலட்சுமி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 62 பேரை கைது செய்தனர்.